
ரம்ஜான் காலத்துல நம்ம அரசியல்வாதிங்க அல்லாரும் நோன்பு கஞ்சி குடிச்சிக்கிட்டே முசுலீம் மக்களை ஐஸ் வக்கிறது வழக்கம். இதுல நம்ம கேப்டன் கட்சிக்காரங்களும் குறை வக்கைல. குல்லா போட்டுகிட்டு விஜயகாந்த் பேசும் போது மத்தவங்கள விட தான்தான் நிறைய பணம் செலவழிச்சு தானம் பண்றதா பொங்கியிருக்காரு. கூடவே ஜெயலலிதாவ பாத்து கருணாநிதிக்கு பயம்னு சொல்றாரு. சரிதான். கலைஞரு அம்மாவ பாத்தும் அம்மாவுக்கு கூடுற கூட்டத்த பாத்து பயப்படறாருங்கறது உண்மைதான்.
ஆனா நம்ம கேப்டனுக்கு பயமே இல்லையா? கட்சி ஆரம்பிச்சு வருசமாச்சு சீட்டு ஒன்னும் தேறலேயேன்னு தொண்டக்கமாரு புழுங்குறது அவருக்கு பயமில்லையா? தனியா நின்னா சேத்து வச்ச சொத்த இழக்கணும்னு கேப்டனுக்கும் தெரியும், சோல்ஜருக்கும் தெரியும். இந்த இலட்சணத்துல அய்யா எந்த கட்சியோட கூட்டு வக்கப்போறாகன்னு ஊரே பேச்சாக் கெடக்கு.
கூட்டணி வச்சா எத்தன சீட் வரும், எத்தன கோடி வரும்னு அய்யாவோட மச்சான் சதீஷ் அல்லா வூட்டுக்கும் போயி பேசிகிட்டு இருக்காறு. அதுல என்ன ரிசல்ட் வருமுன்னு கேப்டனுக்கு பயமில்லையா? காங்கிரச எப்படியாவது சரிக்கட்டி மூன்றாம் கூட்டணின்னு பத்திரிகைகிட்ட நியூஸ் கிளப்பி மட்டும் என்ன செய்ய?
கதர்சட்டக்காரன் டெல்லியில செட்டிலாவறதுக்கு எந்த கட்சின்னு பாப்பானா, இல்ல கேப்டனோட அல்லக்கைகளுக்கு படியளக்குறதப் பாப்பானா? இப்படி ஊருபட்ட பயத்தோட தே.மு.தி.க இருக்கும் போது கேப்டன் ஏன் மத்தவங்க பயத்த பத்தி பேசனும்? ஏதோ கூட்டணியில சேந்தமான்னு பாக்கறத வுட்டுட்டு இப்படி உதாரு விடறது கூட ஒரு அரசியல்தான். விட்ட பணத்த எப்படி எடுக்குறதன்னு அய்யா பயந்துகிட்டு இருக்கிறார்ங்கறதுதான் சத்தியம். இருந்தாலும் இந்த முட்டாப்பய சொல்றத எவன் கேப்பான்?